குப்பிளானில் விழிப்புக் குழுவின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுத் திருட முயற்சி

ஆசிரியர் - Admin
குப்பிளானில் விழிப்புக் குழுவின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுத் திருட முயற்சி

யாழ்.குப்பிளான் தெற்கு வீரமனைப் பகுதியில் திருட்டுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக இரவு வேளையில் விழிப்புக் குழுவினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டுத் திருட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்(17) இரவு குப்பிளான் தெற்கு வீரமனை கன்னிமார் கோயிலுக்கு அண்மையிலுள்ள பகுதி வீட்டில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணின் வீட்டிலேயே நிகழ்ந்துள்ளது.

வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற திருடன் அவ்வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தில் கைவைத்து தங்கச் சங்கிலியைத் தேடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த வயோதிபப் பெண்ணின் கழுத்தில் ஆலயமொன்றின் நூலே இருந்தமையால் திருடன் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளான்.

இதனையடுத்து, மேற்படி வயோதிப் பெண் கூக்குரலிடவே திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். திருட வந்தவன் சிறுவன் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு