SuperTopAds

பிரித்தானியாவில் பொன்னனிகளின் போர்! வெற்றி வாகை சூடியது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி !

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவில் பொன்னனிகளின் போர்! வெற்றி வாகை சூடியது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி !

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பத்திரிசியர் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர்களுக்கு இடையிலான பொன்னனிகளின் போர் 2026 நேற்றைய தினம் இடம்பெற்றது.

பிரித்தானியாவில் அமைந்துள்ள லண்டன் வெஸ்ட்  கறோ மைதானத்தில் 30 பந்து பரிமாற்றங்களை கொண்ட  இந்த துடுப்பாட்ட சுற்றுப்பாட்டி இடம்பெற்றது.

இதன் பொழுது நாணய சுழிற்சியில் வெற்றி பெற்ற சென் பத்திரிசியர் கல்லூரி அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது .

அதன்படி ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி 161 ஓட்டங்களை 30 பந்துபரிமாற்றங்களின் நிறைவில் 9 இலக்குகளை இழந்து பெற்றது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்பத்திரிசியர் கல்லூரி அணி 27 ஆவது பந்து பரிமாற்றத்தில் அனைத்து இலக்குகளையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான பிரித்தானிய பழைய மாணவர்களின் பொன்னனிகளின் போர் துடுப்பாட்ட சுற்று போட்டியினை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி கைப்பற்றியது.

சுற்று போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவன் பனியனும் சிறந்த துடுப்பாட்ட வீரனாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினை சேர்ந்த மிதுசனும் ,சிறந்த பந்து வீச்சாளராக சென் பத்திரிசியர் கல்லூரியின் கென் ,சிறந்த களத்தடுப்பாளராக சென்பத்திரிசியர் கல்லூரியின் றொசாந்தன் அவர்களும் சகலதுறை விளையாட்டு வீரனாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பவியனும் தெரிவு செய்யப்பட்டனர் .

இதேவேளை இதனை தொடர்ந்து 40 வயதிற்கு மேற்பட்ட பழைய மாணவர்களின் சிநேகபூர்வ துடுப்பாட்ட சுற்று போட்டியும் இடம்பெற்ற நிலையில் புனித சென் பத்திரிசியர் கல்லூரி அதனை தனதாக்கிக் கொண்டது.

இதன் பொழுது பிரதம விருந்தினராக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஆசிரியர் குகன் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினர் , புனித சென் பத்திரிசியர் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.