SuperTopAds

வடக்கு ஆளுநரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை

ஆசிரியர் - Editor II
வடக்கு ஆளுநரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை

வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் யூலை 15 வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆளுனரின் முடிவினை சவாலுக்குட்படுத்தி மனுதாரரான முதல்வர் காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் ஆஜராகினர். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை மன்று தடை விதித்துள்ளது.