SuperTopAds

பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது!

ஆசிரியர் - Editor II
பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது!

தெல்தெனிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட  பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் கொலை வழக்கு விசாரணையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வழக்கின் பிரதான சந்தேகநபருக்கும் அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருக்க உதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மற்றொரு சந்தேகநபரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி வருவதுடன், கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.