மன்னாரில் துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் உயிரிழப்பு

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
மன்னார் சவுத் பார் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த ஜெயத்திலக (வயது 46) எனும் இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த இராணுவ வீரர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




