SuperTopAds

பருத்தித்துறையில் கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

ஆசிரியர் - Editor II
பருத்தித்துறையில் கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

புலோலி தெற்கு பகுதியை சேர்ந்த 06 வயதான சிறுவன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளான். 

அது தொடர்பில் வீட்டார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளையும் தேடுதல்களையும் பொலிஸார் மேற்கொண்டதுடன் , ஊறவர்களும் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள கிணறொன்றில் சிறுவனின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ,  சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்