SuperTopAds

முழு அரசு மரியாதையுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

ஆசிரியர் - Editor IV
முழு அரசு மரியாதையுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

தமிழ் திரையுலகில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(10.06.2026) அவர் மரணம் அடைந்தார்.

இந்நிலையில், பாரதிராஜாவின் உடலுக்கு பொலிஸார் அணிவகுத்து வந்து 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், காட் ரோடு பண்ணைத் தோப்பில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2 நாட்களாக திரைத்துறையினர், இரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Radio