SuperTopAds

நெடுந்தீவில் நூலகத்தை திறந்து வைத்த இந்திய உயர்ஸ்தானிகர்

ஆசிரியர் - Editor II
நெடுந்தீவில் நூலகத்தை திறந்து வைத்த இந்திய உயர்ஸ்தானிகர்

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்றைய தினம் புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இன்றைய தினம் நெடுந்தீவுக்கு சென்றபோது பாடசாலை நூலகம் திறந்து வைக்கப்பட்டதுடன் , நூலகத்திற்குத் தேவையான ஒரு தொகுதி நூல்களையும் வித்தியாலய அதிபரிடம் கையளித்தார்.

அத்துடன் பாடசாலை நூலகத்திற்கு தளபாடங்கள் , 100 மாணவர்களுக்கு புத்தகபைகள் , கற்றல் உபகரணங்கள் இசைக்கருவிகள் என்பனவும் வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வின்போது, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ,யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் , நெடுந்தீவு பிரதேச செயலாளர் என பலரும் கலந்துகொண்டனர்.