SuperTopAds

வவுனியாவில் கோர விபத்து - யாழ்.மாவட்ட முன்னாள் செயலரின் மகன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
வவுனியாவில் கோர விபத்து - யாழ்.மாவட்ட முன்னாள் செயலரின் மகன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , கனகராயன் குளம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீதியில் நடந்து சென்ற இரு இளைஞர்கள் மீது பின்னால் மிக வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் கனகராஜன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ் , மாவட்ட முன்னாள் செயலாளர் இமால்ட்டா சுகுமாரின் மகனான சு தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்