SuperTopAds

வந்தே மாதரம் முழுமையாகப் பாட வேண்டியதில்லை”ல் - பினராயி விஜயன்!

ஆசிரியர் - Editor IV
வந்தே மாதரம் முழுமையாகப் பாட வேண்டியதில்லை”ல் - பினராயி விஜயன்!

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்பதில்லை. அந்தப் பாடலின் இரண்டு சரணங்கள் மட்டும் பாடினால் போதும். அதோடு, அந்தப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் 16வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் உரையுடன் இன்று தொடங்கியது.

ஆளுநர் தனது உரையில் -

ஐக்கிய ஜனநாயக முன்னணியின் புதிய அரசை பாராட்டிப் பேசினார்.

இதையடுத்து, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “ஆளுநர் உரையில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மாநிலத்துக்கு எதிராக மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறை குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கேரளா கோரிப்பெற வேண்டிய பல உரிமைகள் உள்ளன.

அவை குறித்து மாநில அரசு மவுனம் சாதித்துள்ளது. மாநிலத்துக்கான மத்திய அரசின் நிதிசார் அணுகுமுறை குறித்தும் ஆளுநர் உரையில் எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.

நீலப் பொருளாதார திட்டம் இங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படுமா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை. மாநிலக் கருவூலம் ஒப்படைக்கப்பட்டபோது அதில் ரூ.5,429 கோடி உபரித் தொகை கையிருப்பில் இருந்தது

தெரிவித்துள்ளார்.