SuperTopAds

IPL - சூப்பர் 4/சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

ஆசிரியர் - Editor IV
IPL - சூப்பர் 4/சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

மும்பை இந்தியன்ஸை 30 ஓட்டங்களால் வீழ்த்தி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சூப்பர்-4 சுற்றுக்கான தகுதியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

முதலில் துடுப்பாடிய RR அணி 20 ஓவர்களில் 205/8 என வலுவான இலக்கை நிர்ணயித்தது.

206 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 175/9 என மட்டுப்படுத்தப்பட்டதால், ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம்,

பஞ்சாப் & கொல்கத்தாவின் அடுத்த சுற்று கனவு சிதறியது.

தற்போது சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,

சன்ரைஸர்ஸ் ஐதராபாத்,

குஜராத் டைட்டன்ஸ்,

ராஜஸ்தான் ரோயல்ஸ்

இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரா தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது