SuperTopAds

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

ஆசிரியர் - Editor II
யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும்  நிலையில் , இன்றைய  யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. 

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. 

சபை அமர்வின் ஆரம்பத்தில் , முள்ளிவாய்க்கால் இன அழிப்பை சித்தரிக்கும் ஒளிப்படம் வைக்கப்பட்டு அதன் முன்பு பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலியைத் தொடர்ந்து அக வணக்கம் இடம்பெற்று, வழமையான சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன