வடக்கு, கிழக்கு படை முகாம்கள் பலப்படுத்தப்படும்! -ருவன் விஜயவர்தன

ஆசிரியர் - Admin
வடக்கு, கிழக்கு படை முகாம்கள் பலப்படுத்தப்படும்! -ருவன் விஜயவர்தன

வடக்கு, கிழக்கில் மூலோபாய ரீதியில் முக்கியமான இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பியகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் -

'அரசாங்கம் தேசிய பாதுகாப்பை எப்பொழுதும் விசேட காரணியாகக் கருதியே வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து வருகிறது. தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக சிலர் கருத்துக்களைக் கூறி மக்கள் மத்தியில் குறுகிய அரசியல் லாபம் தேடுவதற்கு குழுவொன்று முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பொய்யான தகவல்களை சமூக மயப்படுத்துவதற்கும் அக்குழு முயற்சிக்கிறது.

இதனால் முப்படையினர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மழுங்கடிப்பதற்கும் முயற்சிக்கப்படுகிறது. வடக்கு, கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் காணிகள் விடுக்கப்படும்போதும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே முடிவுகள் எடுக்கப்படுகிறது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதிருப்பதை உறுதிப்படுத்த பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் உதவிகளை அரசாங்கம் முழுமையாக வழங்கி வருகிறது என்றும் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு