பொலிஸ் நிலையத்தில் சீருடையை கழற்றி வைத்து விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரி

காலி - பயாகல பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் தமது சீருடையையும் உபகரணங்களையும் பொலிஸ் நிலையத்திலேயே விட்டுவிட்டு பணியிலிருந்து விலகி சென்றுள்ளார்.
பிட்டிகல, இதிபலேகொட பகுதியைச் சேர்ந்த ,மலிந்து தில்ஹார என்ற 26 வயதுடைய இந்த கான்ஸ்டபிள், பொலிஸ் நிலையத்தின் கடமைப் புத்தகத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதில், அதிக பணிச்சுமையின் காரணமாக தாம் மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அதன் பின்னர், தனது சீருடை மற்றும் ஏனைய உபகரணங்களை பொலிஸ் நிலையத்திலேயே விட்டுவிட்டு அவர் வெளியேறியுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர், 2025 ஜூன் 8ஆம் திகதியன்று பொலிஸ் துறையில் இணைந்துள்ளார். பின்னர் ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து பயாகல பொலிஸ் நிலையத்துக்கு இணைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளின் மன அழுத்தத்திற்கான காரணங்கள் மற்றும் அவர் தற்போதைய இருப்பிடம் குறித்து கண்டறிய பயாகல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.




