தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட செபஸ்தி நிஷான் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம், தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து இன்றைய தினமே தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






