யாழில். மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு .

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவி வீனா.டிதுர்ஷா எழுதிய மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் முதன்மை விருந்தினர் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி கலந்து கொண்டதுடன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்
சிறப்பு விருந்தினராக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா. பிரதீபராஜா , தமிழ் துறை தலைவர் பேராசிரியர் செ. சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்
நூல் அறிமுகவுரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் நிகழ்த்தியதுடன் சிறப்புரையை அரசியல் ஆய்வாளர் ச.நிலாந்தன் நிகழ்த்தினார்.
நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்






