SuperTopAds

ICC தரவரிசை - இலங்கை அணி பின்னடைவு!

ஆசிரியர் - Editor IV
ICC தரவரிசை - இலங்கை அணி பின்னடைவு!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  அண்மைய வருடாந்திர தரவரிசைப் புதுப்பிப்பின்படி, ஆண்களுக்கான T20 தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளி 9 வது இடத்திற்கு சென்றுள்ளது.

 

இதேநேரம் ஆண்கள் மற்றும் பெண்கள் தரவரிசையில் முறையே இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தங்கள் முதலிடங்களைத் தக்கவைத்துள்ளன.

ஆண்களுக்கான T20 தரவரிசையில் இந்தியா 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கின்றது.

இதனையடுத்து இங்கிலாந்து 262 புள்ளிகள் மற்றும் அவுஸ்திரேலியா 258 புள்ளிகளுடன் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

இந்தநிலையில் இலங்கை 6 புள்ளிகளை இழந்து 8ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதன்படி பங்களாதேஷ் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான் 10ஆவது இடத்தில் தொடர்கின்றது.

அத்துடன் பெண்களுக்கான T20 தரவரிசையில் அவுஸ்திரேலியா 287 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதற்கமைய இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

குறித்த தரவரிசையில் இலங்கை 7ஆவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது