SuperTopAds

மும்பையின் வெற்றியை உறுதி செய்ய அவசியமாகு. ரோஹித்!

ஆசிரியர் - Editor IV
மும்பையின் வெற்றியை உறுதி செய்ய அவசியமாகு. ரோஹித்!

மும்பை அணி சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்தார்  

தற்போது அவருக்கு 39 வயது. காயத்திற்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 44 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்து தனது அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

ரிக்கல்டனுடன் இணைந்து 229 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய அவர், 143 ஓட்டங்கள் என்ற பலமான ஆரம்ப இணைப்பாட்டத்தை உருவாக்கினார்.

இந்த இன்னிங்ஸில் 6 நான்கு ஓட்டங்கள் மற்றும் 7 ஆறு ஓட்டங்களுடன் 190.90 என்ற ஓட்ட விகிதத்தை (Strike Rate) அவர் பேணினார்.

இந்த சீசனில் மும்பை அணி பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும். இந்த மூன்று வெற்றிகளில் இரண்டிற்கு 'ஹிட்மேன்' தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 220 ஓட்டங்களை வெற்றிகரமாகத் துரத்தி வெற்றி பெற, ரோஹித் 38 பந்துகளில் அதிரடியாக 78 ஓட்டங்களைக் குவித்தார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், தொடர் தோல்விகளில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மும்பை அணிக்காக 5 ஐபிஎல் கிண்ணங்களை வென்று கொடுத்த ஒரு சிறந்த தலைவர் அவர்.