SuperTopAds

தந்தை - மகள் இடையிலான காணி தகராறு கொலையில் முடிவு

ஆசிரியர் - Editor II
தந்தை - மகள் இடையிலான காணி தகராறு கொலையில் முடிவு

களுத்துறை வடக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக, தனது 35 வயதுடைய மகளை இரும்பு பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

காணி உரிமை தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை முற்றியதாலேயே தந்தை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது சந்தேகநபரான 63 வயதுடைய தந்தை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.