மன்னாரில் மலசல கூட குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் - மனைவி கைது

மன்னாரில் வீடொன்றின் மலசல கூட குழியில் இருந்து ஆணொருவரின் சடலம் துண்டாட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மன்னாரை சேர்ந்த அருள் சேயா டெனீஸ்வரன் (வயது 38) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டு சடலம் துண்டாடப்பட்டு மலசல கூட குழிக்குள் போடப்பட்டு இருக்கலாம் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்






