1.65 பில்லியன் டொலர் ஒப்பந்தம் - ராஜஸ்தான் ரோயல்ஸ்ஸை வாங்கியது மிட்டல் குடும்பம்!

இந்திய பிறீமியர் லீக்
தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார பயிற்றுவிப்பாளராக செயற்படும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியின் பெரும்பான்மை பங்குகளை, உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் தலைமையிலான குழுமம் வாங்கியுள்ளது.
சுமார் 1.65 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15,600 கோடி) மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முன்னதாக கல் சோமானி தலைமையிலான குழுமத்துடன் பேசப்பட்ட ஒப்பந்தம் தோல்வியடைந்த நிலையில், தற்போது லக்ஷ்மி மிட்டல், அவரது மகன் ஆதித்யா மிட்டல் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஆதார் பூனாவாலா ஆகியோர் இணைந்து இந்த அணியைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000




