SuperTopAds

போதைக்கு பணம் தராத தாயின் கால்களை உடைத்த மகன்

ஆசிரியர் - Editor II
போதைக்கு பணம் தராத தாயின் கால்களை உடைத்த மகன்

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தராததால் தனது தாயின் கால்களைத் மகன் அடித்து உடைத்துள்ளார்.

கேகாலை - தேவலகம பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்காகத் தனது தாயிடம்   5,000 ரூபா கேட்டுள்ளார். 

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தாய் கூறியதால் ஆத்திரமடைந்த  இளைஞன், அருகில் கிடந்த தடியால் தாயின் இரு கால்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். 

இந்த தாக்குதலில் 46 வயதான அந்தப் பெண்ணின் இரு கால்களும் முறிந்துள்ளன. 

வலியால் துடித்த அவரை அயலவர்கள் மீட்டு,  கேகாலை பொது வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளனர். அவரது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலாளியான மகன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.