SuperTopAds

தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன்!

ஆசிரியர் - Editor II
தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன்!

தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வார்த்தர்க்கத்தை தொடர்ந்து 33 வயதுடைய மகன் 64 வயதான தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

 சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மகனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.