SuperTopAds

வடக்கு ஆளுநரை திடீரென சந்தித்த யாழ் . மாவட்ட இராணுவ தளபதி

ஆசிரியர் - Editor II
வடக்கு ஆளுநரை திடீரென சந்தித்த யாழ் . மாவட்ட இராணுவ தளபதி

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்றையதினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாண மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், ஆளுநருடனான முதலாவது சம்பிரதாயபூர்வ சந்திப்பாக இது அமைந்திருந்தது.

இச்சந்திப்பின்போது இருவருக்குமிடையே சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ள கட்டளைத் தளபதிக்குக் ஆளுநர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். சந்திப்பின் நிறைவில் ஆளுநருக்கு நினைவுச் சின்னத்தையும் கட்டளைத் தளபதி வழங்கி வைத்தார்.