SuperTopAds

படகு கவிழ்ந்து விபத்து - சுற்றுலாவிகள் அருந்தப்பு

ஆசிரியர் - Editor II
படகு கவிழ்ந்து விபத்து - சுற்றுலாவிகள் அருந்தப்பு

நுவரெலியா கிரகரி வாவியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி நீர் விளையாட்டுகளில் ஈடுபடும் படகு ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த வாவியில் நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் நீரில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக படகு விபத்துக்குள்ளானது. 

அதில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். 

இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் நீரில் தத்தளித்தவர்களை மீட்டுள்ளனர். 

இதன்போது எவருக்கும் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் சிறியளவான காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் அந்த படகுகளை இயக்கிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.