SuperTopAds

மன்னாரில் விபத்து - ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
மன்னாரில் விபத்து - ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

மன்னார், தாழ்வுபாடு, தாராபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

வெதுப்பாக உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மன்னார், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது 06 மாதங்களான குழந்தை என தெரியவந்துள்ளது. 

மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.