SuperTopAds

அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

ஆசிரியர் - Editor II
அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும். தலைமை தாங்குகின்றவர்களின் ஆற்றல. ஆளுமை அக்கறை அல்லது அவர்களது உணர்வுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்ற எண்ணங்களோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 மேலும் கூறுகையில் 

புதிய அரசாங்கத்தைப் பொறுத்தவகையில்  அவர்கள் ஆட்சிக்கு வரும் முதல் மக்களது பல பிரச்சினைகள் தொடர்பாக நல்லபல விடயங்களை எல்லாம் கூறிவந்திருக்கின்றார்கள்.

ஆனால் துரதிஸ்டவசமாக அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடகாலத்திற்கு மேலாகிவிட்ட நிலையில்    மக்களது நலன்களை பேணக்கூடிய மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கக் கூடிய வகையிலான எந்தவித   அணுகுமுறைகளையோ பொறிமுறைகளையோ கொண்டிருப்பதாகவோ முன்னெடுப்பதாகவோ தெரியவில்லை.

குறிப்பாக மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி கூட்டங்கள் என்பது அந்தந்த மாவட்ட மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார தேவைகளை முன்னிறுத்தி பல்துறை அதிகாரிகள் அமைப்புகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை பெற்று தீர்வுகளை காண முன்னெடுக்கப்படும் ஒரு கூட்டமாகும்.

குறிப்பாக அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் ஆற்றலும் அக்கறையும் அல்லது அவர்களது உணர்வுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்ற எண்ணங்களோடு  தொடர்புடைய விடையமாக இருககவேண்டும்

ஆனால் தற்போது பல ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மாவட்டத்திலும் சரி பிரதேசங்களிலும் சரி  நடத்தப்பட்டாலும், அரச அதிகாரிகள் உள்ளடங்கலாக பொதுமக்களது பிரதிநிதிகள்  அல்லது பொதுமக்கள் தமது நியாயமான பிரச்சினைகளை கடங்தகாலத்தில் முன்வைத்து தீர்வுகண்டது போன்று  தற்போது அதை செய்யமுடியவில்லை என்ற ஒரு அங்கலாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக  சமூகவலைத் தளங்களிலும் நேரில் வந்து என்னை சந்தித்தவர்களும் தொடலைபேசியூடாகவும் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

அத்துடன் கூட்டங்களின் செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவதாக அல்லது அவர்களை தட்டிக்களிப்பதாகவும் தெரியவருகின்றது. 

நாம் பொறுப்பிலிருந்த காலங்களில் ஊடகங்களுக்கு எந்த சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு அனுமதிகளை மறுத்தது கிடையாது. அவர்களை அவர்கள் பாணியில் செய்தி சேகரிக்க சுதந்திரமாகவே அனுமதித்திருந்தோம்.  

ஆனால் இன்று ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவங்கள் தூதிஸ்டவசமானதாக இருக்கின்றது. அதனடிப்படையின் மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு அது தொடர்பாக ஜனாதிபதி அனுரவுடன் பேசவுள்ளேன் என  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.