SuperTopAds

சகோதரியை கத்தியால் குத்தி விட்டு கிணற்றில் குதித்த சகோதரன் சடலமாக மீட்பு

ஆசிரியர் - Editor II
சகோதரியை கத்தியால் குத்தி விட்டு கிணற்றில் குதித்த சகோதரன் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில், சகோதரியை  கத்தியால் தாக்கிய சகோதரன் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது. 

இதன்போது, சகோதரன், கிராம சேவையாளரான தனது சகோதரியை கத்தியால் தாக்கியுள்ளார். 

காயமடைந்த சகோதரி  முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர், தாக்குதலை மேற்கொண்ட சகோதரர் குமுழமுனையில் உள்ள தனது வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிர் மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்