SuperTopAds

வவுனியாவில் இராணுவத்தினரின் உணவகம் உள்ளிட்ட 4 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

ஆசிரியர் - Editor II
வவுனியாவில் இராணுவத்தினரின் உணவகம் உள்ளிட்ட 4 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

இராணுவத்தினரின் உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க தவிசாளர் தலைமையிலான சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் பூவரசங்குளம் பகுதியிலுள்ள உணவகங்களுக்கு விஜயம் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது சுகாதாரமற்ற முறையி்ல் இயங்கிவந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தாரால் நடாத்தப்படும் உணவகம் உட்பட 4 உணவகங்கள் மற்றும் வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் முச்சக்கர வண்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.