SuperTopAds

யுத்த நிறுத்தத்தை குழப்பும் இஸ்ரேல்; லெபனான் மீதான தாக்குதலில் 254 பேர் மரணம்

ஆசிரியர் - Admin
யுத்த நிறுத்தத்தை குழப்பும் இஸ்ரேல்; லெபனான் மீதான தாக்குதலில் 254 பேர் மரணம்

ஈரானுடனான யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த போதிலும், லெபனான் அதில் உள்ளடங்காது எனத் தெரிவித்து அந்நாட்டின் பல பகுதிகளில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. 

இதன் மூலம் ஈரானை சீண்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் மூலமான யுத்தமா, யுத்த நிறுத்தமா என அமெரிக்கா தீர்மானிக்க வேண்டுமென ஈரான் தெரிவிப்பு.

இந்நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் உறவை புகழ்ந்துள்ள தென்யாகு, ஈரான் இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பலவீனமான நாடாக விளங்குவதாகவும் தெரிவிப்பு.

- பெய்ரூட்: 92 பேர் பலி, 742 பேர் காயம்

- பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள்: 61 பேர் பலி, 200 பேர் காயம்

- பால்பெக்: 18 பேர் பலி, 28 பேர் காயம்

- ஹெர்மெல்: 9 பேர் பலி, 6 பேர் காயம்

- நபாத்தியாஹ்: 28 பேர் பலி, 59 பேர் காயம்

- அலே மாவட்டம்: 17 பேர் பலி, 6 பேர் காயம்

- சிடோன்: 12 பேர் பலி, 56 பேர் காயம்

- டைர்: 17 பேர் பலி, 68 பேர் காயம்