60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய புகையிரத இயந்திரத்தில் தீ

திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ரயில் பெட்டிகளைக் கொண்டு சென்ற ரயில் இயந்திரம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த ரயில் இயந்திரம் சுமார் 60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன




