தான் வளர்த்த காளை மாடுகளே தனது பூதவுடலை சுமக்க வேண்டும் என்றவரின் இறுதி ஆசை நிறைவேறியது

மன்னார் - நறுவிலிகுளத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் பகுதியில் காளை மாடுகளை வளர்த்து மாட்டு வண்டி சவாரிகளில் போட்டியிட்டு வந்த நபர் ஒருவர், தான் இறந்தால், தனது உடலை காளைகள் பூட்டிய தனது மாட்டு வண்டியிலேயே எடுத்து செல்ல வேண்டும் என குடும்பத்தினரிடம் கோரியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அவரது இறுதி ஊர்வலமானது அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு காளைகள் பூட்டிய வண்டிலிலேயே இடம்பெற்றது.
எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகளின் முகத்திலும் சோக உணர்வு காணப்பட்டது.






