தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்!

தமிழகத்தின் ஒருசில இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெறிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.




