"மீட்பு நடவடிக்கை அல்ல, யுரேனியம் திருடும் முயற்சி" - குற்றம் சாட்டிய ஈரான்!

ஈரான் வெளிவிவகார அமைச்சகம், அமெரிக்காவின் F-15E போர் விமானி மீட்பு நடவடிக்கை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அமெரிக்கா, ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E விமானத்தின் இரண்டாவது விமானியை மீட்டதாக அறிவித்திருந்தது. ஆனால், ஈரான், இந்த நடவடிக்கை செறிவூட்டப்பட்ட யுரோனியத்தை திருடும் மறைமுகமான முயற்சி எனக் கூறியுள்ளது.
ஈரான் அரசு செய்தித்தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, “அமெரிக்கா கூறிய rescue operation நடந்த இடம், உண்மையில் விமானி இருந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளது. எனவே, இது யுரேனியும் திருடும் கபடத்தனமான நடவடிக்கையாக இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
ஈரான் இராணுவம், “இந்த நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்தது. அமெரிக்கா பல விமானங்களை தெற்கு Isfahan பகுதியில் அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், முக்கியமான இராணுவ உபகரணங்களை இழக்காமல் thermite தாக்குதல்கள் மூலம் தானே அழித்தது” என தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகள், “இரண்டு MC-130J Commando II போக்குவரத்து விமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை. அதனால், நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஈரானின் IRGC கைகளில் கிடைக்காமல் தடுக்க, விமானங்களை தானே அழித்தோம்” என விளக்கம் அளித்துள்ளனர்.
ஈரான் ஊடகங்கள், “இது அமெரிக்காவின் அவமானகரமான தோல்வி என்றும் தொழில்நுட்ப கோளாறு என்ற விளக்கம் உண்மையை மறைக்கிறது” எனக் கூறுகின்றன.
Isfahan நகரம், ஈரானின் மிக முக்கியமான மிகப்பெரிய அணுசக்தி ஆராய்ச்சி வளாகமாகவும் யுரேனிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் உற்பத்தி மையம் அமைந்துள்ள இடமாகும். இதனால், மீட்பு பனியின் உண்மையான நோக்கம் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.




