SuperTopAds

இலங்கை வம்சாவளி நடிகை சென்னையில் எடுத்த விபரீத முடிவு

ஆசிரியர் - Editor II
இலங்கை வம்சாவளி நடிகை சென்னையில் எடுத்த விபரீத முடிவு

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை மீட்ட பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக , வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிய பிறகு அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது. 

பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த நடிகை சுபாஷினி படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகை சுபாஷினி 'கயல்' என்ற சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார். 

இவரின் உயிரிழப்பு அவரது இரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.