SuperTopAds

சல்மான் கானுடன் நடிக்க நயன்தாரா வாங்கும் சம்பளம்!

ஆசிரியர் - Admin
சல்மான் கானுடன் நடிக்க நயன்தாரா வாங்கும் சம்பளம்!

20 ஆண்டுகளை சினிமாவில் கடந்தும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நயன்தாரா, கடைசியாக மன சங்கர வர பிரசாத காரு திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் Hi, மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்சிக் என பல திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. இந்த நிலையில், நடிகை நயன்தாரா புதிதாக சல்மான் கானின் அடுத்த திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார்.     

ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான நயன்தாராவிற்கு அடுத்தடுத்த பல இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் கூட, அவர் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. அதன்படி, தற்போது தனது இரண்டாவது இந்தி திரைப்படத்தை சல்மான் கானுடன் இணைந்து நடிக்க தேர்வு செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக சல்மான் கான் சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.