ஆசிரியர்களின் இட மாற்ற விவகாரம்.. மூவரை விசாரணைக்கு அழைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு.

வடக்கில் அண்மையில் வழங்கப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் முறைப்பாட்டின் அடிப்படையில் மூவரை நாளை திங்கட்கிழமை விசாரணைக்கு வருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் எழுத்து மூலமாக அழைப்பை விடுத்துள்ளது.
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் ,மற்றும் பொதுச் சேவை ஆணை குழுவின் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது




