SuperTopAds

தலைமன்னாரில் கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் நீதிமன்றம் வழங்கிய தண்டனை

ஆசிரியர் - Editor II
தலைமன்னாரில் கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் நீதிமன்றம் வழங்கிய தண்டனை

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களுக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி அதனை 12 மாதங்களுக்கு நீதிமன்று ஒத்திவைத்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய 10 மீனவர்களின்  வழக்கு விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 10 மீனவர்களுக்கும் 10 வருட சிறை தண்டனை வழங்கி அதனை 12 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்

அத்துடன் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், படகு , மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட சான்று பொருட்களை அரசுடமையாக்கவும் உத்தரவிட்டார்.