யூத் படத்திற்காக கென் கருணாஸ் வாங்கிய சம்பளம்!

அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானவர் கென் கருணாஸ். இதன்பின், வாத்தி, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து கென் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்தான் யூத். இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், யூத் திரைப்படத்திற்காக கென் கருணாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கென் கருணாஸ் ரூ. 2 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.
இப்படி ஒரு தகவல் இணையத்தில் உலா வரும் நிலையில், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




