SuperTopAds

எதிர்க்கட்சி தலைவரால் யாழை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவிகள்

ஆசிரியர் - Editor II
எதிர்க்கட்சி தலைவரால் யாழை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவிகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார் 

கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவினால் நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது 

அதேவேளை கோப்பாய் தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக சதாசிவம் திலீப்குமாரும் , ஒருங்கிணைப்பாளராக கமலசிங்கம் மதனகாந்தும் நியமிக்கப்பட்டு , அவர்களுக்கான நியமன கடிதத்தையும் சஜித் பிரேமதாசா வழங்கி வைத்தார்.