சாணக்கியன் எம்.பிக்கு எதிராக கொழும்பு நீதிமன்றில் முன்னிலையாகும் மூத்த சட்டத்தரணி கே.குருபரன்

ஊடகங்கள் மூலம் தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் ஊடக நிறுவனம் உட்பட 23 பேர் பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஒரு பகுதியினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகவுள்ளார்.
நிகழ்நிலைக்காப்புச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி பலமான எதிர்ப்புக்களை காட்டிய நிலையில் அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குறித்த சட்டத்தை பயன்படுத்தி வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது




