சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: தூத்துக்குடியை பதற வைத்த சம்பவம்!

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்த மாணவி, இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடினர்.
அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வெட்டிக் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




