SuperTopAds

குருநகர் படகு விபத்து - உயிரிழப்பு அதிகரிப்பு

ஆசிரியர் - Editor II
குருநகர் படகு விபத்து - உயிரிழப்பு அதிகரிப்பு

பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்னிக்கை அதிகரித்துள்ளது. 

பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்த 06ஆம் திகதி குருநகர் இறங்கு துறையில் இருந்து பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்கு உள்ளானதில் கடலில் மூழ்கி அன்றைய தினம் இருவர் உயிரிழந்ததுடன் , சிறுவன் உள்ளிட்ட 13 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த உரும்பிராய் பகுதியை சேர்ந்த எட்வேட் உதயகுமாரி (வயது 64) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.