SuperTopAds

நயினாதீவில் வாள் வெட்டு - அம்மன் கோவில் பூசகர் படுகொலை

ஆசிரியர் - Editor II
நயினாதீவில் வாள் வெட்டு - அம்மன் கோவில் பூசகர் படுகொலை

யாழ்ப்பாணத்தில் ஆலய பூசகர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வெளிமாவட்டத்தை சேர்ந்த பூசாரிகள் இருவர் நயினாதீவில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் மற்றும் அம்மன் ஆலயம் ஆகியவற்றில் பூசகர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் இரு பூசகர்களுக்கும் இடையில் குடும்ப தகராறு நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் முருகன் கிருஷ்ணகுமார் (வயது 43) என்பவரின் வீட்டுக்கு சென்ற 35 வயதான மற்றைய பூசகர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு வாளினால் வெட்டியதில் பூசகர் சம்பவ  இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பூசகரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.