SuperTopAds

போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது!

ஆசிரியர் - Editor II
போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.