SuperTopAds

உரும்பிராயில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ

ஆசிரியர் - Editor II
உரும்பிராயில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்றையதினம் சனிக்கிழமை தீப்பரவல் ஏற்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் தாங்கி வண்டியொன்று எரிபொருள் விநியோகித்து கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் துரித செயற்பாட்டால் தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதன்போது யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவும் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.

தீப்பரவல் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையம் கணிசமான சேதத்துக்குள்ளானது.

தீ விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.