SuperTopAds

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

ஆசிரியர் - Editor II
புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

புதுப்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு தொட்டியடி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மக்களால் முற்றுகையிடப்பட்டது.

தொடர்ச்சியாக அப்பகுதியில் சிலர் கசிப்பு உற்பத்தி மேற்கொண்டு வருவதை அவதானித்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் சட்டவிரோத செயற்பாட்டை நிறுத்துமாறு பலமுறை தெரிவித்தும் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் காரணமாக இப்பகுதியில் இளைஞர்கள் மற்றும் பலர் சட்டவிரோத கசிப்கை பயன்படுத்திவிட்டு குடும்பத்தகராறு மற்றும் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடுபவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளனர். 

சட்டவிரோத கசிப்பினை பயன்படுத்துவதன் காரணமாக பல இளைஞர்கள் தற்பொழுது விளையாட்டுகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெற்ற பகுதியை இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொது அமைப்புகள் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். 

குறித்த நடவடிக்கையின்போது 600 லீற்றருக்கு மேற்பட்ட கோடா மற்றும் கசிப்பு என்பனவற்றை மக்கள் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த தடய பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.