SuperTopAds

நாட்டில் அதிக வெப்பநிலை

ஆசிரியர் - Editor II
நாட்டில் அதிக வெப்பநிலை

நாட்டின்  பல மாவட்டங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெப்பச் சுட்டெண் கணிசமாக உயர்ந்துள்ளது

அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்களைத் தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி, போதிய அளவு தண்ணீர் குடிப்பது, வெளிர் நிற ஆடைகளை அணிவது மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

வெப்பச் சுட்டெண் என்பது காற்றின் வெப்பநிலை மட்டுமல்ல, ஈரப்பதத்தையும் கருத்தில் கொண்டு மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையை பிரதிபலிக்கும்.

முதியவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளான நபர்களைக் கண்காணிப்பதும், அதிக வெப்பம் நிலவும் காலங்களில் குழந்தைகளை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்புகளை பின்பற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.