மிக பெரிய அதிர்ச்சியை கொடுக்க போகுது தங்கம் விலை!

மத்திய கிழக்கில் கடந்த இரு நாட்களாகப் போர் சூழலில் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச தங்க மார்கெட்டில் அது நேரடியாக எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இன்றும் அது தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. இன்றைய தினம் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொடரும்! சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கூட இதுவரை தொடர்ந்து உயர்ந்ததே வருகிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமே இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது.
இதன் காரணமாகவே தங்கம் விலை எகிறி வருகிறது. கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் ஒருவித போர் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஈரானைச் சுற்றிலும் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களைக் குவித்து வந்தது. இது இப்போது முழு வீச்சில் போராக வெடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தது. இதனால் அப்போதே தங்கம் விலை உயர ஆரம்பித்துவிட்டது. கமேனி படுகொலை சனிக்கிழமை காலை அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். மேலும், ஈரானின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனி உயிரிழப்பை ஈரானும் உறுதி செய்துள்ள நிலையில், அவர்களும் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இதர நாடுகளில் இருக்கும் அமெரிக்க முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதனால் நிலைமை கையைவிட்டுச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்கவே போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுவே தங்கம் விலையிலும் நேரடியாக எதிரொலிக்கிறது. எப்போதுமே ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம் விலையில் ஏற்றம் இருக்கவே இருக்காது. ஆனால், இப்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. கிட்டத்தட்ட புதிய பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து நிலவும் சூழலில், அது தங்கம் விலையிலும் நேரடியாக எதிரொலிக்கிறது. தங்க மார்கெட் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்து, ரூ.1,26,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ரூ.15,775க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.325க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்திற்குப் போய் உள்ள சூழலில், இந்திய சந்தையிலும் அது எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.
தங்கம் விலை நிலவரம்
1.03.2026 - ஒரு சவரன் 1,26,200
28.02.2026 - ஒரு சவரன் 1,24,400
(பிற்பகல்) 28.02.2026 - ஒரு சவரன் 1,21,600
(காலை) 27.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
26.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,360
25.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,440
24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120
23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880
22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440
21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440
20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360




