SuperTopAds

மருதனார் மடத்தில் “புல் டாங்” பெற்றோல் அடித்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை

ஆசிரியர் - Editor II
மருதனார் மடத்தில் “புல் டாங்” பெற்றோல் அடித்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்பாணம், மருதனாமடம் சந்தியில் பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் நின்ற பல்சர் ரக மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியது.

யாழ்ப்பாணத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசை  காணப்படும் நிலையில் பழைய மோட்டார் சைக்கிளுக்கு முழு அளவில் எரிபொருள் நிரப்பிய நிலையில் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, அது திடீரென தீப்பற்றி கொண்டது.

இதனை அடுத்த எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் மோட்டார் சைக்கிள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.